ரூ.26.80 லட்சம் உண்டியல் வசூல்


ரூ.26.80 லட்சம் உண்டியல் வசூல்
x

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு ரூ.26.80 லட்சம் உண்டியல் வசூல் கிடைத்தது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள 35 உண்டியல்கள் கோவில் துணை கமிஷனர் சுரேஷ் மேற்பார்வையில் இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நேற்று நடைபெற்றது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், ஸ்ரீ கந்த குரு வித்யாலயா வேத பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் ஐயப்ப சேவா சங்க உறுப்பினர்கள் கலந்து பணம் மற்றும் சில்லரை காசுகளை பிரித்து எண்ணினார்கள். அதில் ரொக்கமாக 26 லட்சத்து 80 ஆயிரத்து 801 ரூபாய் இருந்தது. மேலும் 169 கிராம் தங்கமும், 1 கிலோ 610 கிராம் வெள்ளியும் கிடைத்தது. நிகழ்ச்சியில் மதுரை கூடலழகர் கோவில் உதவி ஆணையர் செல்வி, மதுரைமீனாட்சி கோவில்கண்காணிப்பாளர் பானுமதி, அலங்காநல்லூர் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் சாவித்திரி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அலுவலக கண்காணிப்பாளர் பாலலட்சுமி, உள்துறைகண்காணிப்பாளர் சுமதி, துணைகமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், பேஷ்கார் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story