கோவில்பட்டி அருகே பசி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி அருகே பசி ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் பஞ்சாயத்து நாரணாபுரம் கிராமத்தில் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஐ.நா. சபையின் 2-வது இலக்கான பசி ஒழிப்பு விழிப்புணர்வுக்கான கூட்டாஞ்சோறு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆவல்நத்தம் பஞ்சாயத்து தலைவர் காளியம்மாள் தலைமை தாங்கினார். கூட்டாஞ்சோறு பற்றி இயக்குனர் பரத் ஜெயராஜ், சண்முகராஜ், ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்- சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தது. யங் இந்தியன் அமைப்பினர் சார்பில் சாலை விதிகளை மதித்தல் விளக்கம், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், புத்தகப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் கூட்டாஞ்சோறு சமைத்தனர். நிகழ்ச்சியில் சிறுவர்கள், சிறுமிகள், பெரியோர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேச்சிமுத்து நன்றி கூறினார்.