டிரைவர் கொலை வழக்கில் கணவன்-மனைவி கைது


டிரைவர் கொலை வழக்கில் கணவன்-மனைவி கைது
x

மணப்பாறை அருகே டிரைவர் கொலை வழக்கில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர். இடப்பிரச்சினையில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திருச்சி

மணப்பாறை அருகே டிரைவர் கொலை வழக்கில் கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர். இடப்பிரச்சினையில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

டிரைவர் கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தாளகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 31). டிரைவரான இவர் கூலி வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் முன் கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன், வையம்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (55) என்பவருக்கும், தங்கபாண்டியனுக்கும் இடையே இடப்பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் காலையில் குடிபோதையில் இருந்த தங்கபாண்டியன் சுப்பிரமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணி தங்கபாண்டியனை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் முன்பு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தங்கபாண்டியனை சுப்பிரமணி வெட்டிக்கொலை செய்தார். மேலும் சுப்பிரமணியின் மனைவி மாலதியும் சம்பவத்தின் போது உடன் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். இடப்பிரச்சினையில் தங்கபாண்டியனை கொலை செய்ததாக தம்பதி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


Next Story