பெண் தற்கொலை வழக்கில் கணவன்- மனைவி கைது
பெண் தற்கொலை வழக்கில் கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை
வாலாஜா இந்திரா நகரை சேர்ந்தவர் சசிகலா (வயது 35). இவரது கணவர் வினோத்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ந்தேதி சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குழந்தைகள் பாட்டியின் பராமரிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் சசிகலா தற்கொலை செய்து கொண்ட போது வீட்டில் அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் என் தற்கொலைக்கு காரணம் வீட்டின் அருகில் வசிக்கும் சாமுண்டீஸ்வரி, அவரது கணவர் சிவனேசன் (48) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பழனி ஆகியோர்தான் என்றும், இவர்கள் இடத்தகராறு காரணமாக எனக்கு தொல்லை கொடுத்தனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுண்டீஸ்வரி மற்றும் சிவனேசன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பழனியை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story