திங்கள்சந்தை அருகே சோகம்:கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


திங்கள்சந்தை அருகே சோகம்:கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திங்கள்சந்தை அருகே கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்ெகாலை செய்தனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

இரணியல்:

திங்கள்சந்தை அருகே கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்ெகாலை செய்தனர். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வயதான தம்பதி

திங்கள்சந்தை அருகே உள்ள ஆரோக்கியபுரம் குழியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலையா நாடார் (வயது85). இவரது மனைவி செல்லம் (77). இவர்களுக்கு சந்திரசேகர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.

பாலையாநாடாரும், அவரது மனைவியும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்களது வீட்டின் அருகே மகன் சந்திரசேகர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் பாலையா நாடார் நோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. இவர்களுக்கு மகன் சந்திரசேகர் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அவ்வப்போது உணவு, டீ, ேபான்றவை கொடுத்து வந்தனர்.

கதவு திறக்கப்படவில்லை

இந்தநிலையில் நேற்று காலையில் வெகுநேரமாக பாலையா நாடாரின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் வயதான தம்பதி இருவரையும் வெளியே காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பாலையா நாடாரின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்தார். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும் கதவு பூட்டப்படாமல் லேசாக திறந்து கிடந்தது.

இதையடுத்து பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் உள்ளே ஒரு அறையில் ஜன்னலில் கணவன், மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதைபார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து இரணியல் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடல்களை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாலையா நாடாரின் மகன் சந்திரசேகர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வயதான தம்பதியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story