டியூஷன் படிக்க வந்த மாணவியிடம் தவறான உறவு மனைவி கொடுத்த புகாரில் கணவன் கைது
சென்னை திருவொற்றியூரில் டியூஷன் சென்டரில் படிக்க வந்த முன்னாள் மாணவியிடம் தவறான உறவு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர்
சென்னை
சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரைச் சேர்ந்த சேகர் அப்பகுதியில் 30 வருடங்களாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டியூஷன் சென்டரில் படிக்க வந்துள்ளார்.
அப்போது மாணவிக்கும் சேகருக்கும் பழக்கம் ஏற்பட்டு முறையற்ற தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மனைவி வனஜா தட்டிக் கேட்ட போது அவரை கொலை செய்து விடுவதாக சேகர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story