தூக்குப்போட்டு கணவர் தற்கொலை


தூக்குப்போட்டு கணவர் தற்கொலை
x

நாகூரில் மனைவி கோபித்து கொண்டு சென்றதால் தூக்குப்போட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர் மியான் தெருவை சேர்ந்தவர் சதக்கத்துல்லா (வயது 57). இவருக்கு ஹாஜா ஹமீது பதுருநிஷா (47) என்ற மனைவியும், ஹாஜி மரைக்காயர் (15) என்ற மகனும் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கணவரிடம் கோபித்து கொண்டு ஹாஜா ஹமீது பதுருநிஷா மகனுடன் தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சதக்கத்துல்லா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று சதக்கத்துல்லா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதி பொதுமக்கள் நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சதக்கத்துல்லா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி கோபித்து கொண்டு சென்றதால் மனமுடைந்த சதக்கத்துல்லா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story