காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை


காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காதல் மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை

சிவகங்கை

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்டனூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 22). இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் தேவகோட்டை அருகே உள்ள ஒரு தனியார் பஞ்சாலையில் பணியாற்றி வந்தனர். இவர்கள் ஆவரங்குடி என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டனின் மனைவி தூக்குப்போட்டுக் கொண்டு இறந்து விட்டார்.

இதற்கிடையில் காதல் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த மணிகண்டன் சருகணி அருகே உள்ள திராணி காட்டில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதிலிருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த இடத்தில் இருந்து ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து திருவேகம்பத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.


Next Story