தூக்குப்போட்டு கணவன் தற்கொலை


தூக்குப்போட்டு கணவன் தற்கொலை
x

மனைவி பிரிந்து சென்றதால் தூக்குப்போட்டு கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள கீழத்திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மாரீஸ்வரன் (வயது 25). இவருக்கும் செங்கமலப்பட்டியை சேர்ந்த ராமர் என்பவரின் மகள் ராஜேஸ்வரி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாரீஸ்வரனுக்கும், ராஜேஸ்வரிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த மாரீஸ்வரன் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story