பெண் போலீஸ் ஏட்டுவின் கணவர்உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை
நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டுவின் கணவர் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டுவின் கணவர் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.
எலக்ட்ரீசியன்
நெல்லை மேலப்பாளையம் காவலர் குடியிருப்பு பகுதி அருகில் உள்ள எல்ஷடைன் நகரைச் சேர்ந்தவர் தாசன். இவருடைய மகன் சந்தனகுமார் (வயது 47). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி அனிதா, போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் சந்தனகுமார் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் கடந்த 14-ந்தேதி இரவில் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
மின்சாரம் பாய்ச்சி தற்கொலை
அதன்படி, வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்ற சந்தனகுமார் ஏ.சி. எந்திரத்துக்கு செல்லும் மின்சார ஒயரை தனது கால்களில் சுற்றிக் கொண்டு, மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு கொண்டார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்தும், தூக்கு மாட்டியதில் கழுத்து இறுகியும் அவர் பரிதாபமாக இறந்தார்.
முன்னதாக சந்தனகுமார் தனது உடலில் மின்சாரம் பாய்கிறது. எனவே என்னை யாரும் தொட வேண்டாம் என்று கடிதத்தில் எழுதி, அதனை அறையின் வெளியே வைத்திருந்தார். மறுநாள் காலையில் இதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்த சந்தனகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் பெண் போலீஸ் ஏட்டுவின் கணவர் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.