மனைவியை வாளால் வெட்டிய கணவன் போலீசில் சரண்
மனைவியை வாளால் வெட்டிய கணவன் போலீசில் சரண் அடைந்தார்.
திருச்சி மலைக்கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் அமர்நாத் (வயது 28), ரகுநாத் (25). இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அமர்நாத்துக்கு மாரியம்மாள் (25) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் மாரியம்மாளுடன் ரகுநாத்திற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அமர்நாத்திற்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் சம்பவத்தன்று மனைவி மாரியம்மாளை வாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அமர்நாத் மனைவியை வெட்டிய வாளுடன் கோட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.