பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்-மனைவி கைது


பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய  கணவன்-மனைவி கைது
x

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்-மனைவி

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில் விபசாரம் நடப்பதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் சோதனை நடத்தினார்கள். அங்குள்ள ஒரு வீட்டில் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கணுவுக்கரையைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 45). இவருடைய மனைவி மேனகா (38) ஆகியோர் பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரிந்தது. இதையடுத்து விஜயகுமாரையும், மேனகாவையும் போலீசார் கைது செய்தார்கள். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.


Next Story