குன்னத்தூர் கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு
குன்னத்தூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தின் போது பணித்தள பொறுப்பாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்து கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
குன்னத்தூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தின் போது பணித்தள பொறுப்பாளர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறித்து கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
கிராம சபை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ஹரிதாஸ் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் பகுத்தறிவு மாமது, துணைத்தலைவர் சசிகலாகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மின் விளக்கு எரியவில்லை. கால்வாய் சுத்தம் செய்வது, குப்பைகள் அதிகமாக உள்ளதை அகற்றுதல், குடிதண்ணீர் அதிக நேரம் விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு குறைகளை கூறினர்.
பணித்தள பொறுப்பாளர்கள் நீக்கம்
ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் 5 பணித்தள பொறுப்பாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீக்கப்பட்டனர். ஆனால், அதில் 2 பேருக்கு மட்டும் மீண்டும் வேலை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் மற்ற 3 பேரும் ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து எங்களை நீக்க காரணம் என்ன, நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆகையால் மீண்டும் வேலை தருமாறு கேட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கூட்டம் விரைவாக முடித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.