அல்கஸார்-க்கு புதிய பேஸ் மாடலை அறிமுகம் செய்யும் ஹூண்டாய்
அல்கஸார் அணிவரிசையில் ஒரு புதிய பேஸ் டிரிம்-iபிரஸ்டீஜ் எக்ஸிகியூட்டிவ் என்று பெயரிட்டு ஹூண்டாய் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய டிரிம், இதற்கு முன்பு இருந்த பேஸ் பிரஸ்டீஜ் டிரிம்-க்கு மாற்றாக வெளிவருகிறது. இதன் விலை ₹15.89 லட்சம் மற்றும் ₹17.77 லட்சம் (எக்ஸ்- ஷோரூம், டெல்லி) என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒவ்வொரு நிகரான வேரியன்ட்டிற்கும் ₹55,000 என்ற குறைவான விலையில் கிடைக்கும் புதிய பிரஸ்டீஜ் எக்ஸிகியூட்டிவ், தற்போது நிறுத்தப்பட்டுவிட்ட பிரஸ்டீஜ் டிரிம்-ல் இருந்த சில அம்சங்கள் குறைக்கப்பட்டும், சில அம்சங்கள் மாற்றப்பட்டும் வெளிவருகிறது.
பிரஸ்டீஜ் எக்ஸிகியூட்டிவ், 7 இருக்கைகள் பெட்ரோல்-MT, 6- மற்றும் 7-இருக்கைகள் டீசல்-MT மற்றும் 7-இருக்கைகள் டீசல்-AT என்ற உள்ளமைவுகளோடு கிடைக்கிறது. முந்தைய பேஸ் பிரஸ்டீஜ் பெட்ரோல் வேரியன்ட் ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 6-இருக்கைகள் உள்ளமைவோடும் கிடைத்தது. இதுவரை அல்கஸார் அலைவரிசை முழுவதிலும் ஒரு ஸ்டாண்டர்டு அம்சமாக 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருந்தது. ஆனால் இப்போது, ஹூண்டாய் கிரேட்டா காரில் நடுத்தர உள்ளமைவு டிரிம்களில் வழங்கப்பட்டு வருகிற 8.0 அங்குலம் என்ற சிறிய திரையுடன் புதிய அல்கஸார் பிரஸ்டீஜ் எக்ஸிகியூட்டிவ் வருகிறது.
8.0 அங்குல அளவுள்ள சிறிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்-ல் புளுலிங்க் உடன்இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பமும் மற்றும் ஓவர் தி ஏர் அப்டேட்களைப் பெறும் திறனும் இல்லை.பிரஸ்டீஜ் டிரிம் காரில் ஸ்டாண்டர்டு அம்சமாக இருந்த இரு மைக் அமைப்புகளுக்குப் பதிலாக ஒரேஒரு மைக் உடன் புதிய பிரஸ்டீஜ் எக்ஸிகியூட்டிவ் வருகிறது. இருப்பினும் ஆப்பிள் கார்பிளே மற்றும்ஆன்ட்ராய்டு ஆட்டோவிற்கான ஒயர்லெஸ் இயக்கத்திறனையும் மற்றும் வாய்ஸ் கமாண்டுகளையும்இந்த சிறிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 10.25அங்குல பெரிய திரையில் இதற்கு முன்பு கிடைத்திராத நாப்கள் மற்றும் பட்டன்களை இந்த சிறிய ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.
எல்இடி முகப்பு விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல்,ஒயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் இன்னும் பல சிறப்பான அம்சங்களை தக்க வைத்துக்கொண்டிருப்பதால் புதிய பிரஸ்டீஜ் எக்ஸிகியூட்டிவ் டிரிம் நேர்த்தியான மற்றும் நல்லவசதியான காராக திகழ்கிறது. உயர்வான உள்ளமைவு அளவுகள் கொண்ட டிரிம்களோடுஒப்பிடுகையில், பிரஸ்டீஜ் எக்ஸிகியூட்டிவ் டிரிம் காரை வாங்குவதற்கான காத்திருப்பு காலம் குறைவானதாகவே இருக்கும்.
சிப் பற்றாக்குறை என்ற உலகளாவிய பிரச்சனைக்கு மிக விரைவில் நிவாரணம் கிடைக்கக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் இல்லை. எனவே, காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கும் மற்றும் கார் விற்பனையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லவும் எதிர்காலத்தில் இதே போன்ற அணுகுமுறையை இன்னும் அதிக எண்ணிக்கையிலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றக்கூடும் என்பதே இதன் உள்ளார்ந்த செய்தியாகும்.