புலவர் நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


புலவர் நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 30 July 2023 7:08 PM IST (Updated: 30 July 2023 7:53 PM IST)
t-max-icont-min-icon

எழுத்தாளர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

சென்னை,

சென்னை தி.நகரில் எழுத்தாளர் மா.நன்னன் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;

"மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். பல்லாயிரம் பக்கங்களை எழுதி குவித்திருக்கக்கூடிய எழுத்தாளர் நன்னனில் விரலுக்கு விழுப்புரத்தில் நடைபெற்ற இளைஞரணி பாசறை கூட்டத்தில் மோதிரம் அணிவித்தவன் நான். அதனை இன்றும் பெருமையாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

அவர் மறைந்த பிறகும், புத்தகம் அவரது பெயரால் வெளிவந்துகொண்டிருக்கிறது. அப்படியென்றால், எழுத்தால், சிந்தனையால், செயலால் அவர் வாழ்கிறார்.124 புத்தகங்களை நமக்காக அவர் உருவாக்கியுள்ளார்.

தனக்கென ஒரு எழுத்து நடையை, பேச்சு நடையை நன்னன் வைத்திருந்தார். பிழையின்றி எழுதுவதையும், பிழையின்றி பேசுவதையும் கற்பிக்கக்கூடிய ஆசானாக அவர் இருந்தார். புலவர் நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடமையாக்கப்படும்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story