தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை பார்த்து பெருமையாக இருக்கிறது - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

File Photo
முதல் அமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
சென்னை,
முதல் அமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியை பாராட்டி, ரூ.60 லட்சம் ஊக்கத்தொகையினை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின்,
முதல் அமைச்சர் கோப்பையில் 3.7 லட்சம் பேர் பங்கேற்றனர். கபடி , சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. உலக விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல, உள்ளூர் வீரர்களையும் நாம் மதிப்போம் என்பதன் எடுத்துக்காட்டு தான் இந்த விழா. தமிழகத்தில் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை பார்த்து பெருமையாக இருக்கிறது.அமைச்சர் உதயநிதியால் விளையாட்டுத்துறை மேம்படுகிறது. விளையாட்டுத்துறை செயல்பாடுகள் பெருமையளிக்கின்றன. என்றார்