மோட்டார் சைக்கிளை திருடியதால் காவலாளியை கொன்றேன்நண்பர் பரபரப்பு வாக்குமூலம்


மோட்டார் சைக்கிளை திருடியதால் காவலாளியை கொன்றேன்நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
x

மோட்டார் சைக்கிளை திருடியதால் காவலாளியை கொன்றேன் என்று நண்பர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்,

மோட்டார் சைக்கிளை திருடியதால் காவலாளியை கொன்றேன் என்று நண்பர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

காவலாளி கொலை

நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45), தனியார் நிறுவன காவலாளி. கடந்த 15-ந் தேதியன்று வெளியே சென்ற முருகன் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவருடைய மனைவி ராதா கோட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முருகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் 17-ந் தேதி மாலையில் முருகன் கத்திக்குத்து காயங்களுடன் சொத்தவிளை கடற்கரைச் சாலையில் பிணமாக கிடந்தார். அதன்பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது முருகனை அவரது நண்பரான பீச் ரோட்டை சேர்ந்த குமரகுரு என்ற குருநாதன் (29) கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்்.

கோர்ட்டில் சரண்

இதற்கிடையே கடந்த 19-ந் தேதி குமரகுரு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தார். அவரை சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி நேற்று முன்தினம் போலீஸ் காவலில் விசாரிக்க நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் சிறையில் இருந்து குமரகுருவை சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது காவலாளியை கொலை செய்தது ஏன் என்பது குறித்து குமரகுரு பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை சிவஞானபுரம் ஆகும். எனக்கு முருகன் தான் நாகர்கோவிலில் வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்தார். நான் கொசுவலை அடிக்கும் வேலை செய்து வந்தேன்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி எனது மோட்டார் சைக்கிளை முருகன் திருடி விட்டார். அதை கேட்ட ே்பாது கொடுக்காததால் சொத்தவிளை கடற்கரைக்கு அழைத்து சென்று ஆத்திரத்தில் கத்தியால் குத்தினேன். அதில் அவர் இறந்து விட்டார். அதைத்தொடர்ந்து நான் சென்னை தப்பி சென்று விட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் 2 கொலை வழக்கு

குமரகுரு மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும், அடிதடி வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குமரகுருவுக்கு போலீஸ் காவல் இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.


Next Story