மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கக்கோரிசாலையில் படுத்து தொழிலாளி போராட்டம்


மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கக்கோரிசாலையில் படுத்து தொழிலாளி போராட்டம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கக்கோரி சாலையில் படுத்து தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேனி

சாலையில் படுத்து போராட்டம்

தேனி அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ராதேவி. இந்த தம்பதிக்கு சிவநந்தினி என்ற மகள் உள்ளார். மாற்றுத்திறனாளியான சிவநந்தினி திருமணமாகி கணவருடன் விருதுநகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கருப்பையா தேனி-மதுரை சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு திடீரென சாலையில் படுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது தனக்கு நியாயம் வேண்டும் என்று கூறி சத்தம்போட்டார். இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்த போலீசார் பார்த்து அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, மாற்றுத்திறனாளியான எனது மகளுக்கு அரசு சார்பில் உதவித்தொைக மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. தற்போது அவர் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டார்.

மாற்றுத்திறனாளி சான்றிதழ்

இதனால் எனது மகளின் மாற்றுத்திறனாளி சான்றிதழை விருதுநகருக்கு மாற்றி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மனு கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேரடியாக சென்று கேட்டால் அதிகாரிகள் சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே எனது மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழை விருதுநகருக்கு மாற்றித்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டேன் என்றார்.

இதையடுத்து போலீசார் அவரை மோட்டார்சைக்கிளில் மாற்றுத்திறனாளி அலுவலகத்தி்ற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு உடனடியாக அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர். அதன்பின்னர் அவர் அங்கிருந்து புறப்பபட்டு சென்றார். சாலையில் படுத்து தொழிலாளி போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story