"சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே. என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
சென்னை,
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், . சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம் என தெரிவித்திருந்தார்.உதயநிதியின் இந்த பேச்சு சர்ச்சையானது. நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தனது கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது ,
சனாதனம் பற்றி நான் பேசியது சரியானதே. ஆனால் பாஜகவினர் நான் கூறியதை திரித்துப் பேசுகின்றனர். இந்தியா கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜகவினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோது அதை மாற்றியது திராவிட மாடல். பொய் செய்திகளை பரப்புவதுதான் பாஜக வேலை என தெரிவித்தார்.