பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மறு உருவமாக செயல்படுவேன் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் மறு உருவமாக செயல்படுவேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை தனியார் கல்லூரி மைதானத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதாவின் சார்பு அணிகளாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை செயல்படுகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. ஆனால், முடிவில் யாரையும் பா.ஜனதா அரசு கைது செய்யவில்லை.
பா.ஜனதா எத்தனை சோதனைகள் நடத்தினாலும் தி.மு.க.வின் கிளை செயலாளர் கூட பயப்படமாட்டான். பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் மறுஉருவமாக செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.