வெளிநாடுகளிலும் சிகரங்களில் ஏறி சாதிப்பேன்


வெளிநாடுகளிலும் சிகரங்களில் ஏறி சாதிப்பேன்
x

வெளிநாடுகளில் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைப்பேன் என எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ள முத்தமிழ் செல்வி கூறினார்.

விருதுநகர்


வெளிநாடுகளில் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைப்பேன் என எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ள முத்தமிழ் செல்வி கூறினார்.

எவரெஸ்ட் சிகரம்

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளதுடன் சமீபத்தில் ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்பரஸ் சிகரம் ஏறியும் சாதனை படைத்துள்ளார். நேற்று விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த முத்தமிழ் செல்வி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் பெருமை அடைகிறேன். தமிழகத்தில் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் பெண் என்ற அளவில் பெயர் பெற்றுள்ளேன். மேலும் கடந்த ஜூலை 21-ந் தேதி ஐரோப்பா கண்டத்தில் உள்ள எல்பரஸ் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளேன். அடுத்து செப்டம்பர் மாதம் கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறவும் திட்டமிட்டு உள்ளேன்.

மலையேறும் வீரர்கள்

உலகத்தில் உள்ள 7 கண்டங்களில் அனைத்து உயரமான சிகரங்களிலும் ஏறி உலக சாதனை படைத்த பெண் என்ற அளவில் சாதனை படைக்க இலக்கு நிர்ணயித்து உள்ளேன்.

ஏற்கனவே எவரெஸ்ட் சிகரம் ஏறும் போது தமிழக அரசு சார்பில் எனக்கு ரூ. 25 லட்சம் நிதி உதவி அளித்தனர். ஒரு வருடத்திற்கு மலையேறும் வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை எனக்கு வழங்கினர். மேலும் எனக்கு அனைத்து வகைகளிலும் தொடர்ந்து உதவியும், ஊக்கமும் அளித்து வருகின்றனர். தொடர்ந்து மலை ஏறுவதற்கான உதவிகள் கிடைத்தால் நான் சாதனை படைப்பேன். இதன் மூலம் தமிழகத்திலும் அதிக எண்ணிக்கையில் மலையேறும் வீரர்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும். 7 கண்டங்களில் உள்ள சிகரங்களை ஏறி சாதனை படைத்த பின் தமிழகத்தில் மலையேற இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story