நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் - சசிகலா


நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் - சசிகலா
x

தேர்தலில் அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் இன்று செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா கூறியதாவது ;

அண்ணாவின் பாதையில் எங்கள் பயணம் தொடரும். நேரம் வரும் போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றாக இணைந்து நல்ல வெற்றியை பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக அரசு சொன்னதை செய்யவில்லை என்று குற்றம்சாட்டியதோடு, ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக நிறுத்துவது நல்லதல்ல என்றும் கூறினார்.


Related Tags :
Next Story