"பதவிக்காக காலையும் பிடிக்கமாட்டேன்; கழுத்தையும் பிடிக்கமாட்டேன்" - டிடிவி தினகரன் பேட்டி


பதவிக்காக காலையும் பிடிக்கமாட்டேன்; கழுத்தையும் பிடிக்கமாட்டேன் -  டிடிவி தினகரன் பேட்டி
x

பதவிக்காக காலையும் பிடிக்கமாட்டேன், கழுத்தையும் பிடிக்கமாட்டேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை அவர் எந்த கட்சி என்று அவரால் சொல்ல முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டால் தான் இரட்டை இலை சின்னத்தை கொடுக்க முடியும் என்பது தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் போது தேர்தல் வந்தால் எவ்வாறு அவரால் மெகா கூட்டணி அமைக்க முடியும். அமமுக கட்சி சுதந்திரமாக இயங்கக்கூடியது ஆகும்.

ஆனால் அமமுக கட்சி சுதந்திரமாக இயங்கக்கூடியது ஆகும். என்னிடம் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பீர்களா என கேட்கிறீர்கள். அதிமுக கட்சி தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது. தலை இல்லாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் அதிமுகவின் தொண்டரே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார்.

நான் எடப்பாடி பழனிச்சாமியுடன் கூட்டணி வைப்பேன் என்று எப்போதும் கூறியது கிடையாது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அதிமுகவின் தொண்டர்கள் ஒரு அணியாக ஒன்று திரள வேண்டும். அவ்வாறு ஒன்றுகூடி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்.


Next Story