சென்னிமலை அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தந்தைக்கு சால்வை அணிவித்த ஈரோடு கூடுதல் கலெக்டர்


சென்னிமலை அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தந்தைக்கு சால்வை அணிவித்த ஈரோடு கூடுதல் கலெக்டர்
x

சென்னிமலை அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தந்தைக்கு சால்வை அணிவித்த ஈரோடு கூடுதல் கலெக்டர்

ஈரோடு

சென்னிமலை

ஈரோடு மாவட்ட கூடுதல் கலெக்டரான நரேன்வீர் மணீஸ் சங்கராவ் நேற்று சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குப்பிச்சிபாளையம் ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திடீரென ஆய்வு செய்தார். பின்னர் குப்பிச்சிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள பதிவேடுகளை பார்வையிட்டார். அங்கு வேளாண்மை துறை சார்பில் விழிப்புணர்வு கிராமிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவ் கலந்து கொண்டார். அங்கு நிகழ்ச்சியை காண வந்த குப்பிச்சிபாளையம் எடக்காட்டை சேர்ந்த விவசாயி தங்கமுத்து என்பவரிடம் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவ் வேளாண்மை பணிகள் குறித்து விசாரித்தார். அப்போது கூடுதல் கலெக்டரிடம் விவசாயி தங்கமுத்து, என்னுடைய மகன் இளையராஜா என்பவரும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் கலெக்டராக பணி புரிகிறார் என கூறினார்.

அதைக்கேட்ட கூடுதல் கலெக்டர் மகிழ்ச்சி அடைந்து விவசாயி தங்கமுத்துவுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் தங்கமுத்து வீட்டுக்கு சென்று மத்திய பிரதேச மாநிலத்தில் கலெக்டராக பணிபுரியும் இளையராஜாவிடம் செல்போன் மூலம் பேசி நலம் விசாரித்தார். அப்போது இளையராஜா கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததற்கு நன்றி தெரிவித்தார். சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர் பாபு குப்பிச்சிபாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுச்சாமி மற்றும் வேளாண் அதிகாரிகள் அப்போது உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story