இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x

இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் Iṉcūraṉs niṟuvaṉattukku rū.10 Āyiram aparātam 10 thousand fine to the insurance company

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் ராம் உதய மார்த்தாண்டன் என்பவர் ஒரு தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசி எடுத்திருந்தார். அதன் பின்னர் அவரது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவரது மகன் நாகர்கோவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சைக்காக ரூ.10,757 செலுத்தியுள்ளார்.

அதன் பின்னர் இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் உதய மார்த்தாண்டன் வக்கீல் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. எனவே மன வேதனை அடைந்த ராம் உதய மார்த்தாண்டன் இதுதொடர்பாக குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு

தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சைக்காக ஏற்கனவே செலவழித்த ரூ.10,757, நஷ்ட ஈடாக ரூ.15 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் என ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story