321 பேருக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய அடையாள அட்டை


321 பேருக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய அடையாள அட்டை
x

அரக்கோணத்தில் நடந்த முகாமில் 321 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய அட்யாளை அட்டைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் நடந்த முகாமில் 321 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய அட்யாளை அட்டைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

அடையாள அட்டை

அரக்கோணம் அரசினர் பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவி வழங்குதல் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு 321 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய அடையாள அட்டைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்பிற்கான பணி ஆணைகள் 3 பேருக்குக்கும் வழங்கினார்.

முகாமில் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வேண்டி 257 பேரும், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 59 பேர், ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தில் 22 பேர், வங்கி கடனுக்காக 109 பேருக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி கட்டிடம் ஆய்வு

முன்னதாக அரக்கோணம் ஒன்றியம் வேடல் கிராமத்தில் சேதமடைந்த அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணியினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரக்கோணம் ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா சவுந்தர், நகரமன்றத் தலைவர் லட்சுமி பாரி, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, நகரமன்ற துணைத் தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணக்குமார், தாசில்தார் பழனி ராஜன், நகராட்சி ஆணையர் லதா, அரக்கோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் சவுந்தர், டாக்டர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



Next Story