கஞ்சா வைத்திருந்த ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது


கஞ்சா வைத்திருந்த ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்த ஐ.டி. நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா விற்பனை

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வது, அவர்களது வங்கி கணக்குகளை முடக்குவது ஆகிய நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் புத்தேரி பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர்.

2 பேர் கைது

உடனே 2 பேரிடமும் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணை நடத்தியதில், நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த சுஜித் குமார் (வயது 27), ஒழுகினசேரியை சேர்ந்த ஸ்ரீராமச்சந்திரன் (25) என்பதும், இவர்களில் சுஜித்குமார் பெங்களூருவில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனத்திலும், ஸ்ரீராமச்சந்திரன் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதும் தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் கைது செய்த போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story