இடைச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா


இடைச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா
x
தினத்தந்தி 31 May 2022 7:31 PM GMT (Updated: 1 Jun 2022 4:33 AM GMT)

இடைச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி, ஜூன்.1-

காரைக்குடி கழனிவாசல் இடைச்சி ஊரணிக்கரையில் அமைந்துள்ள இடைச்சியம்மன் கோவில் 34 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் பால்குட விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி என்.ஜி.ஓ காலணி ஸ்ரீ சக்தி முத்தாலம்மன் கோவிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தும் அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதைத் தொடா்ந்து கோவில் முன்பு அம்மனுக்கு பொங்கலிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் கோவில் கவுரவ தலைவர் நல்லாசிரியர் சுப. வீரபாண்டியன், நகராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் மற்றும் பக்தர்கள் கொண்டனர். இரவு கோவிலில் வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவ சமூகத்தினர் செய்திருந்தனர்.


Next Story