நீதிமன்ற வழக்குகளை சிறப்பாக முடிக்க யோசனை:ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு வெகுமதி


நீதிமன்ற வழக்குகளை சிறப்பாக முடிக்க யோசனை:ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு வெகுமதி
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்ற வழக்குகளை சிறப்பாக முடிக்க யோசனை தெரிவித்த ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு வெகுமதி வழங்கி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பது குறித்த சிறப்பாக யோசனை வழங்கிய ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்தும், விசாரணையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை காலதாமதம் இல்லாமல் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பது குறித்தும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கோர்ட்டு பணியை மேற்கொள்ளும் போலீசாருடனான ஆய்வு கூட்டம் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை விரைந்து முடிப்பதற்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் இதில் நீதிமன்ற அலுவல் குறித்து சிறப்பான முறையில் பதிலளித்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சங்கரலிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி, ஏரல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ் (தூத்துக்குடி நகரம்), வசந்த்ராஜ் (திருச்செந்தூர்), மாயவன் (ஸ்ரீவைகுண்டம்), வெங்கடேஷ் (கோவில்பட்டி), லோகேஸ்வரன் (மணியாச்சி), அருள் (சாத்தான்குளம்), ஜெயச்சந்திரன் (விளாத்திகுளம்), சம்பத் (நில அபகரிப்பு தடுப்பு பிரிவு) சிவசுப்பு (மதுவிலக்கு அமலாக்க பிரிவு) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story