மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை


மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை
x

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி. 67 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். 21 நபர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் பதிவு, 65 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு, 62 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள், மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story