போலீஸ் தேடிய 2 பேர் கைது


போலீஸ் தேடிய 2 பேர் கைது
x

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு தொடர்பாக போலீஸ் தேடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஆஞ்சநேயர் சிலை திருட்டு தொடர்பாக போலீஸ் தேடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிலை திருட்டு

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் கற்சிலை கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி இரவு திருட்டுப்போனது. இது குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த சிலை திருட்டு வழக்கு கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.இந்த சிலை திருட்டு வழக்கின் விசாரணை அதிகாரியாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு கும்பகோணம் சரக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கும்பகோணம் கருப்பூர் பைபாஸ் சாலை பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, தும்பிக்குளம், தாளவேடு சின்ன தெரு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நீலகண்டன் (வயது30), மற்றும் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு, புலிமேடு ஆலமரத்து தெரு பகுதியைச் சேர்ந்த வரதன் மகன் மணிகண்டன் (32) என்றும் அவர்கள் இருவரும் சேர்ந்து பட்டீஸ்வரம் கோவிலில் இருந்த ஆஞ்சநேயர் கல் சிலையை திருடி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story