இடும்பன் சாமி கோவில் குடமுழுக்கு


இடும்பன் சாமி கோவில் குடமுழுக்கு
x

கீழ்வேளூர் அருகே இடும்பன் சாமி கோவில் குடமுழுக்கு நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே மேலவிடங்களூர் இடும்பன் சாமி கோவில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் சுதர்சன ஹோமம், தன பூஜை, முதல்கால யாக சாலை பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம்,2-ம் கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.இதை தொடர்ந்து கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து இடும்பன் சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.இதேபோல கீழ்வேளூர் அருகே சாட்டியகுடி வலம்புரி விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது.


Next Story