சிறு குறு தொழில்கள் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் கொடுத்தால் தொழில் வளம் பெருகும்; கனிமொழி எம்.பி. பேச்சு


சிறு குறு தொழில்கள் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் கொடுத்தால் தொழில் வளம் பெருகும்; கனிமொழி எம்.பி. பேச்சு
x

சிறு குறு தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தால் தொழில்வளம் பெருகும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

தூத்துக்குடி

சிறு குறு தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தால் தொழில்வளம் பெருகும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

தொழில் கண்காட்சி

தூத்துக்குடியில் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கமான துடிசியா சார்பில் தொழில் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக தொழிற்சாலைகள் பங்கு பெற்று தங்களின் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கூடங்குளம் அனுமின் நிலையம் டி.சி.டபுள்யூ, ஸ்பிக், என்.டி.பி.எல். அனல் மின் நிலையம், மற்றும் பல முக்கிய தொழில் நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

2-வது நாளான நேற்று கண்காட்சியை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பேசுகையில், "வங்கிகளை பொறுத்தவரை பெரிய அளவிலான தொழில் தொடங்குவதற்கு கேள்விகள் எதுவும் இல்லாமல் எளிதில் கடன் கொடுக்கிறார்கள். ஆனால் சிறு குறு தொழில் நிறுவனத்தினர் கடன் கேட்டால் அதிக அளவிலான கேள்விகளை கேட்கிறார்கள். சிறு, குறு தொழில்கள் தொடங்க வங்கிகள் எளிதில் கடன் கொடுத்தால் தொழில்வளம் பெருகும்" என்றார்.

இதில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், செயலாளர் ராஜ் செல்வின், பொருளாளர் எலன்ஸ் ராஜா, ஸ்டால் பொறுப்பாளர்கள் அருள்சகாயராஜ், தன்ராஜ், கதிரேசபாண்டியன், ரஞ்சித் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவி

கடம்பூரில் நடந்த விழாவில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்று 131 பேருக்கு ரூ.44 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னபாண்டியன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கயத்தாறு மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, கயத்தாறு பேரூராட்சி தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை, கடம்பூர் நகர செயலாளர் பாலமுருகன், கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன், தாசில்தார் சுப்புலட்சுமி, மண்டல துணை தாசில்தார்கள் சுபா, வெள்ளத்துரை, அய்யப்பன், திரவியம், பிச்சையா, கிராம நிர்வாக அலுவலர் இசக்கிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுசாமி, கயத்தாறு வட்டார வளர்ச்சி ஆணையாளர்கள் அரவிந்தன், பானு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story