மன்மோகன் சிங் கூறினால் சரி: கவர்னர் ஆர்.என்.ரவி கூறினால் தவறா? தமிழ்நாடு பா.ஜ.க. கேள்வி


மன்மோகன் சிங் கூறினால் சரி: கவர்னர் ஆர்.என்.ரவி கூறினால் தவறா? தமிழ்நாடு பா.ஜ.க. கேள்வி
x

கூடங்குளத்தில் போராட்டம் செய்பவர்களை அமெரிக்க என்.ஜி.ஓ.க்கள் நிதி அளித்து தூண்டி விடுகின்றன என்று மன்மோகன் சிங் கூறியதாக பாஜக விமர்சித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி பயன்பட்டது என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதற்காக தி.மு.க.வினரும், காங்கிரஸ் கட்சியினரும் கதறுகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், கனிமொழி எம்.பி.யும் கவர்னர் பேசியது தவறு என கண்டிக்கின்றனர்.

2012-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், "இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கூடங்குளத்தில் போராட்டம் செய்பவர்களை அமெரிக்க என்.ஜி.ஓ.க்கள் நிதி அளித்து தூண்டி விடுகின்றன என்று மன்மோகன் சிங் கூறியதாக பாஜக விமர்சித்துள்ளது.

என்று கூறியதை மறந்துவிட்டு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் நீலிக்கண்ணீர் வடிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

அதேபோன்று, 2012 பிப்ரவரி 29-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி, கூடங்குளம் போராட்டத்திற்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் தான் காரணம் என்று கூறியதையும், அ.தி.மு.க. அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறியதையும் மு.க.ஸ்டாலின் மறுக்க முடியுமா?

எதிர்க்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேசபக்தர்கள் என்றும், ஆளும் கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேசவிரோதிகள் என்றும் முத்திரை குத்துவது மலிவான அரசியல் மட்டும் அல்ல ஆபத்தான அரசியலும் ஆகும்.

மன்மோகன் சிங் கூறினால் சரி, ஆர்.என்.ரவி கூறினால் தவறா? எந்த அடிப்படை ஆதாரத்தை கொண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கூடங்குளம் போராட்டத்தை தூண்ட வெளிநாட்டு நிதி பயன்பட்டது என்று கூறினார் என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story