இந்திராகாந்தி போல மோடி செயல்பட்டிருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்; கே.எஸ்.அழகிரி அறிக்கை
இந்திராகாந்தி போல மோடி செயல்பட்டிருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல. அது ஒரு பரிந்துரை. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.
அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story