சந்தேகத்திற்கிடமாக பன்றிகள் இறந்தால்கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்;மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்


சந்தேகத்திற்கிடமாக பன்றிகள் இறந்தால்கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்;மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
x

சந்தேகத்திற்கிடமாக பன்றிகள் இறந்தால் கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டு்கோள் விடுத்துள்ளார்.

ஈரோடு

ஊஞ்சலூர்

சந்தேகத்திற்கிடமாக பன்றிகள் இறந்தால் கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வேண்டு்கோள் விடுத்துள்ளார்.

அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பகத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக காட்டுப்பன்றிகள் இறந்துள்ளன. இதனையடுத்து அங்கு நோய் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 பன்றி வளர்ப்புப் பண்ணைகளை கால்நடை பராமரிப்புத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் பண்ணையில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். வெளியாட்களை பண்ணைக்குள் அனுமதிக்கக்கூடாது. ஓட்டல் கழிவுகளை பன்றிக்கு உணவாக வழங்க வேண்டாம் என்று பன்றி வளர்ப்புப் பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அச்சப்பட வேண்டாம்

ஏதாவது பன்றிகள் சந்தேகத்துக்கிடமான வகையில் இறந்தால் உடனடியாக அது குறித்து கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவினர் மூலம் பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கவும் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஒரு பன்றியில் இருந்து மற்றொரு பன்றிக்கு பரவக்கூடியது. பன்றியில் இருந்து மனிதனுக்கோ அல்லது மற்ற கால்நடைகளுக்கோ பரவாது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இந்த தகவல் ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story