பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை


பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை
x

பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி 27-வது வார்டு பகுதியில் நேற்று மாநகராட்சி மேயர் சுஜாதா, இளநிலை உதவி பொறியாளர் செல்வராஜி, கவுன்சிலர் கணேஷ்சங்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது அங்குள்ள 28-வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விடுபட்ட பணிகளை மேற்கொள்ள மேயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்கு கால்வாய் அமைக்கவும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கை எடுத்தார். அப்போது அங்குள்ள பொதுமக்கள் இங்கு பன்றிகள் மற்றும் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக புகார் அளித்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் மேயர் கூறுகையில், வேலூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் வளர்க்கும் 7 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வளர்த்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேலூர் முத்து மண்டபம் அருகே உள்ள கருத்தடை மையம் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதன் மூலம் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றார்.


Next Story