பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்காவிட்டால் பள்ளிக்கூடத்தை இழக்க நேரிடும் -ஐகோர்ட்டு


பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்காவிட்டால் பள்ளிக்கூடத்தை இழக்க நேரிடும் -ஐகோர்ட்டு
x

பழுதடைந்த கட்டிடத்தை சரி செய்யாமல் பிரச்சினை செய்ய நினைத்தால், பள்ளிக்கூடத்தை இழக்க நேரிடும் என்று மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ் சங்கத்துக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ் என்ற சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராக உள்ளேன். சில ஆண்டுகளாக இந்த சங்கத்தில் நிர்வாகம் சரியாக இல்லை. இந்த சங்கம் நடத்தி வரும் ஸ்ரீசீதாராம் வித்யாலயா பள்ளிக்கூடத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் 2012-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இந்த பள்ளிக்கூடம் முறையாக கட்டப்படவில்லை. மண் பரிசோதனை செய்யவில்லை. சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.,விடம்) முறையான அனுமதியும் பெறவில்லை. சட்டவிரோத கட்டிடத்தில் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. தீயணைப்பு அதிகாரிகள் இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து, தீயணைப்பு தடுப்பு உரிமம் வழங்கவும், மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு செய்து துப்புரவு மற்றும் சுகாதாரம் சான்றிதழ் வழங்கவும் மறுத்து விட்டனர்.

கல்விக்கட்டணம்

மோசமான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தில் இயங்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 1,500 மாணவர்களையும், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் இறைவன்தான் காப்பாற்றி வருகிறார்.

விபத்துக்கள் நடந்தால், மாணவர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேற முறையான வசதிகள் இல்லை. பள்ளிக்கூடத்தின் பிரதான நுழைவு வாயிலே 7 அடி அகலம்தான் உள்ளது.

கல்வி கட்டணம் நிர்ணயிக்குழு 2010-11 கல்வியாண்டு முதல் 2012-13 கல்வியாண்டு வரை மாணவர்களிடம் இருந்து ரூ.1.35 கோடி வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், இந்த கல்வியாண்டுகளில் பள்ளி நிர்வாகம் ரூ.1.68 கோடிக்கு மேல் கட்டணமாக மாணவர்களிடம் இருந்து வசூலித்துள்ளது.

தடை வேண்டும்

மோசமான நிலையில் உள்ள கட்டிடத்தில், அங்கீகாரம் இல்லாமல் இயங்கும் இந்த பள்ளிக்கூடத்துக்கு எதிராக அரசு அதிகாரிகளும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி 13-ந்தேதி பிறப்பித்த அரசாணையின்படி பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்ய கல்வித்துறை செயலாளர், மெட்ரிக்குலேசன் இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த பள்ளிக்கூடத்துக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி நிர்வாகத்துக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இழக்க நேரிடும்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த உத்தரவில், "மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பள்ளிக்கூடம் கட்டிடம் மோசமாக இருந்தால், அந்த பள்ளி நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த பள்ளிக்கூடத்தை நடத்தும் சங்க உறுப்பினர்களுக்கும், மனுதாரருக்கும் இடையே உள்ள பிரச்சினையை ஊக்குவிக்க முடியாது. பள்ளிக் கட்டிடம் வலுவாக இல்லை என்றால், சங்கத்தின் பிற உறுப்பினர்களுடன் சேர்ந்த மனுதாரர் அதை சீரமைக்கவும், புதிதாக கட்டவும் முன் வரவேண்டும். அதற்கு மாறாக பிரச்சினை செய்ய வேண்டும் என்று நினைத்தால், மனுதாரர் மட்டுமல்ல சங்கமும் பள்ளிக்கூடத்தை இழக்க நேரிடும். இந்த வழக்கிற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும். விசாரணையை மார்ச் 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story