வியாபாரிகளை அச்சுறுத்தினால் வணிகர் சங்கம் துணை நிற்கும்-விக்கிரமராஜா பேச்சு


வியாபாரிகளை அச்சுறுத்தினால் வணிகர் சங்கம் துணை நிற்கும்-விக்கிரமராஜா பேச்சு
x

‘வியாபாரிகளை அச்சுறுத்தினால் வணிகர் சங்கம் துணை நிற்கும்’ என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

'வியாபாரிகளை அச்சுறுத்தினால் வணிகர் சங்கம் துணை நிற்கும்' என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா பேசினார்.

முப்பெரும் விழா

விக்கிரமசிங்கபுரத்தில் வர்த்தக சங்க முப்பெரும் விழா தலைவர் பீட்டர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. ஷேக் அலி, ஜெயக்குமார், முருகேசன் அதியமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாக்குழு தலைவர் கவுன்சிலர் குட்டி கணேசன் வரவேற்றார். அரிமா சங்கம் தலைவர் பொன்ராஜ் தொகுப்புரை வழங்கினார். தீர்மானங்களை காசிராஜன், செல்லத்துரை வாசித்தனர்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன், மாநில கூடுதல் செயலர் ஆர்.கே.காளிதாசன், நெல்லை மாவட்ட தலைவர் செல்வராஜ், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன் ஆகியோர் பேசினார்கள்.

ஈரோட்டில் மாநாடு


மாநில தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:- அரசு துறைகளில் இருந்து அதிகாரிகள் வந்து அத்துமீறி சோதனை என்ற பெயரில் வணிகர்களை அச்சுறுத்தல் செய்தால் வணிகர் சங்கம் துணை நின்று நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கிறேன். உற்பத்தி செய்யும் இடத்தில் முதலில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அரசு அதிகாரிகள் வியாபாரிகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வருகிற மே மாதம் 5-ந் தேதி மாநில வர்த்தக சங்க மாநாடு ஈரோட்டில் நடக்க உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். வர்த்தகர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்கப்பட்டு வணிகர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும். பாரத ஸ்டேட் வங்கி மூலம் கூடுதலாக ரூ.10 லட்சம் வரையில் கடன் பெற்று தரப்படும் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கல்வி பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விக்கிரமசிங்கபுரம் நகர்மன்ற துணை தலைவர் திலகா சிற்றரசன், அம்பை யூனியன் துணை தலைவர் ஞானகனி உள்பட வர்த்தக சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சிவந்திபுரத்தில் இருந்து விழா மேடை வரை பேரணி நடைபெற்றது.


Next Story