நேரில் வந்து கியாஸ் சிலிண்டர் எடுத்துச்சென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது


நேரில் வந்து கியாஸ் சிலிண்டர் எடுத்துச்சென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது
x

நேரில் வந்து கியாஸ் சிலிண்டர் எடுத்துச்சென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது- உதவி கலெக்டர் எச்சரிக்கை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகத்தில் கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் மற்றும் நுகர்வோர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர் தாலுகாவை சேர்ந்த நுகர்வோர்களும், கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு உதவி கலெக்டர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கியாஸ் சிலிண்டரை வீடுகளுக்கு வினியோகம் செய்யும்போது ரூ.50 கட்டாயப்படுத்தி வாங்குகின்றனர்.

கிராமங்களுக்கு சிலிண்டர் வினியோகம் செய்யும் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்று கம்பெனிகளுக்கே வந்து சிலிண்டர் எடுத்துச் செல்லும் பொதுமக்களிடத்திலும் ரூ.50 முதல் ரூ.70 வரை கட்டாயப்படுத்தி வசூலிக்கின்றனர் என்று பல்வேறு குறைகளை தெரிவித்தனர்.

மேலும் கூட்டத்தில் புகார் தெரிவித்தால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து உதவி கலெக்டர் பேசுகையில், கம்பெனிகளுக்கு நேரில் வந்து சிலிண்டர் எடுத்துச் சென்றால் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.

இங்கு தெரிவிக்கப்பட்ட புகார்களை மீண்டும் அடுத்த கூட்டத்தில் தெரிவிக்காதவாறு குறைகளை கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் களைய வேண்டும் என்றார்.

இதில் ஆலோசனை குழு உறுப்பினர் நடுப்பட்டு ரவி, இயற்கை விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஷாகீர்ஷா, விவசாய சங்க பிரதிநிதிகள் சாமி, சிவக்குமார், பழனிச்சாமி, சரவணன் மற்றும் வட்டவழங்கல் தாசில்தார்கள், கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story