பணம் கொடுத்தால் வாக்காளர்களும் புகார் அளிக்கலாம்கலெக்டர் தகவல்
கலெக்டர் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்பு குழுக்கள் என மொத்தம் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகமான மாநகராட்சி அலுவலகத்திலும் 24 மணிநேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.
இடைத்தேர்தல் தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்கலாம். மாவட்ட தேர்தல் அதிகாரி 1800 425 0424, 0424 2256782, 0424 2267672. தேர்தல் நடத்தும் அதிகாரி 1800 425 ௯௪௮௯௦ பறக்கும் படை குழுக்கள் - 7094488017, 7094488049, 7094488072, 7094488076, 7094488982, 7094488983.இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.