உரம் தட்டுப்பாடு என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை


உரம் தட்டுப்பாடு என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உரம் வருகை

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நடப்பு பருவத்துக்கு தேவையான 1,459 டன் யூரியா (எம்.எல்.எல்), 418 டன் யூரியா (எம்.சி.எப்.எல்.), 215 டன் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் சென்னை மணலி மற்றும் காட்பாடி, முண்டியம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை ரெயில் நிலையத்துக்கு வந்தது.

அதை வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் உரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் கூறியதாவது:-

இருப்பு உள்ளது

நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 4,294 டன் யூரியா, 1,614 டன் டி.ஏ.பி., 855 டன் பொட்டாஷ், 7,268 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 387 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வளஅட்டை பரிந்துரையின் படி பயிறுக்கு தேவையான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெற்று பயனடையலாம்.

தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் விற்பனை முனைய கருவி வாயிலாக விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்ய வேண்டும்.

விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை அளித்து தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து மண்பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட அளவுபடி உரங்களை பெற்ற பயன்அடையலாம்.

உர உரிமங்கள் ரத்து

சட்ட விதிகளுக்கு உட்பட்டு உர விற்பனையாளர்கள் விவசாயிகளக்கு மானிய விலையிலான உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால் உர உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

மாவட்டத்தில் போதிய அளவு உரம் இருப்பில் உள்ளது. உரம் தட்டுப்பாடு என்ற வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story