ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு: முன்னாள் காவல்துறை அதிகாரி கைது


ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு:  முன்னாள் காவல்துறை அதிகாரி கைது
x

ஐ.எப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் காவல் அதிகாரி ஹேமந்தர குமாரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை கிண்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த என்.எல்.எஸ் ஐ.எப்.எஸ் எனும் நிதி நிறுவனமானது வாடிக்கையாளர்களிடம் 6-10 சதவீதம் வரையில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டனர்.

சுமார் 84,000 ஆயிரம் பேரிடம் இருந்து ரூ 5,900 கோடி ரூபாய் மோசடி செய்து வட்டி, அசல் என கொடுக்காமல் இருந்துவந்துள்ளனர். இதனை தொடர்ந்து எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேகொண்டு, அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்களை கைது செய்தனர்.

ஏற்கனவே வெங்கடேசன் என்பவரை ஒரு மாதத்திற்கு முன்பு கைது செய்து இருந்த நிலையில் தற்போது முன்னாள் காவல் துறை அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளனர். அவர் மூலமாக மட்டும் சுமார் 550 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த நிதி நிறுவன முக்கிய இயக்குனர்கள் வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாகவும், அவர்களை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எப்.எஸ் நிதி மோசடியில் இதுவரை 6 பேர் கைதான நிலையில் 791 வங்கிக் கணக்குகளில் ரூ.121 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.39 கோடி மதிப்பிலான சொத்துகள் 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story