நாமக்கல் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி. ஆய்வு


நாமக்கல் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி. ஆய்வு
x

நாமக்கல் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

நாமக்கல்

நாமக்கல் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய சென்னை தலைமையிடத்து காவல்துறை ஐ.ஜி. ஜோஜி நிர்மல்குமார் நேற்று நாமக்கல் வந்தார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். போலீஸ் நிலையத்தில் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ள வழக்குகள் விவரம், குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள், தண்டனை பெற்று கொடுத்த வழக்குகள் குறித்த விவரங்களை ஐ.ஜி. ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழகம் முழுவதும் சிறந்த போலீஸ் நிலையங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த போலீஸ் நிலையமாக மாவட்ட அளவில் நாமக்கல் போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில் ஐ.ஜி. நேரில் வந்து ஆய்வு செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story