படகுத்துறை, போலீஸ் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி. ஆய்வு


படகுத்துறை, போலீஸ் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் படகுத்துறை, போலீஸ் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஆய்வு செய்தார். மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் பகுதிகளையும் பார்வையிட்டார்.

திருவாரூர்

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையில் படகுத்துறை, போலீஸ் நிலையத்தில் திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் ஆய்வு செய்தார். மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும் பகுதிகளையும் பார்வையிட்டார்.

திருச்சி மண்டல ஐ.ஜி.ஆய்வு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு நேற்று மாலை திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் வருகை தந்தார். பின்னர் அவர் ஆண்டு தோறும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கும் ஜாம்புவானோடை சிவன்கோவில் பகுதியை பார்வையிட்டார்.

பின்னர் ஊர்வலம் செல்லும் பாதையான தர்கா, சிவராமன் ஸ்தூபி, பதற்றம் நிறைந்த ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ்நிலையம், புது பள்ளிவாசல், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை, பட்டுக்கோட்டை சாலை, செம்படவன்காடு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படகுத்துறை

இதை தொடா்ந்து சிலை கரைக்கும் பாமணி ஆற்று படித்துறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து அவர், லகூன் செல்லும் பாதை, மற்றும் படகுத்துறை ஆகியவைகளை ஆய்வு செய்தார்.

பின்னர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கோப்புகளையும் பார்வையிட்டு போலீசாரிடம் சந்தேகங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தஞ்சை டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு. விவேகானந்தன் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story