அதிசய கிணற்றில் ஐ.ஐ.டி. குழுவினர் மீண்டும் ஆய்வு
அதிசய கிணற்றில் ஐ.ஐ.டி. குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே ஆயன்குளம் படுகை அருகில் சுமார் 50 அடி அழம் உள்ள கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்கு மழைகாலத்தில் படுகையில் இருந்து எவ்வளவு தண்ணீர் சென்றாலும் உடனுக்குடன் உள்வாங்கியது. இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த அதிசய கிணற்றை சென்னை ஐ.ஐ.டி. குழுவினர் ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இந்த நிலையில் அந்த குழுவினர் மீண்டும் அதிசய கிணற்றை கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தனர். அருகில் உள்ள மற்ற கிணறுகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். திசையன்விளை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் நவீன நுண்துளை கேமரா, தண்ணீரில் மிதக்கும் கேமரா போன்றவற்றின் மூலம் ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story