இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்


இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்
x

இளையான்குடியில் 3½ கி.மீ. தொலைவில் அமையும் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை,

இளையான்குடியில் 3½ கி.மீ. தொலைவில் அமையும் புதிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு,க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கோரிக்கை மனு

சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இளையான்குடி மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் முகமதுசைபுல்லா கோரிக்கை மனு ெகாடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

3½ கி.மீ. ெதாலைவில்...

இளையான்குடியில் தற்போதைய பஸ் நிலையத்தில் எந்த பஸ்சும் நின்று செல்வதில்லை. பயணிகளை இறக்கிவிட்டு உடனே புறப்பட்டு விடும்.

தற்போதைய பஸ் நிலையத்தை சுற்றிலும் தெருக்களும், கடைகளும், இருக்கும் போதே இரவு 7 மணிக்கு மேல் மக்கள் புழக்கம் அதிகம் இருக்காது. அப்படி இருக்கும் போது 3.8 கிலோ மீட்டர் தூரத்தில் அமையும் புதிய பஸ் நிலையத்தை மக்கள் பயன்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கும்.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் பஸ் நிலையத்திற்கான இடத்தேர்வு மறு ஆய்வு செய்யப்படும் என்றும், அரசுக்கு மறுஅறிக்கை தாக்கல் செய்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் போராட்டத்தை கைவிட்டோம். ஆனால்அதிர்ச்சியூட்டும் விதமாக நகர மக்களால் முற்றிலும் புறக்கணிப்பட்ட புதிய பஸ் நிலைய பூமிபூஜை மக்களின் எதிர்ப்பினை கருத்தில் கொண்டு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

மறுபரிசீலனை

இதனை தொடர்ந்து தான்அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய புதிய பஸ் நிலைய எதிர்ப்புக்குழு உருவாக்கப்பட்டது. இதன்பிறகு முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்க மீண்டும் தபால்கள் கார்டு அனுப்பும் இயக்கம் நடத்தியும் மற்றும் கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றி மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். அத்துடன் பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் நேரில் வந்து ஆய்வு செய்து திட்டத்தை ரத்து செய்வதாக சொன்னார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது இளையான்குடி நகர மக்களின் முழு எதிர்ப்பையும் மீறி வெகு தொலைவில் இந்த புதிய பஸ் நிலையம் தேவையா? என்பதை தாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இத்திட்டத்திற்கான மக்களின் எதிர்ப்பை தாங்கள் கனிவோடு பரிசீலித்து இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story