சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது
ஊட்டி
ஊட்டி அக்ரஹாரம் தெருவில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக நேற்று முன்தினம் மாலையில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்த பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் மதுபாட்டில்கள் இருந்தது. தொடர்ந்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர், பழைய அக்ரஹாரம் தெருவை சேர்ந்த சங்கர் என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் சங்கரை கைது செய்து, அவரிடம் இருந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டி கிளை சிறையில் அடைத்தனர்.