பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை


பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை
x
தினத்தந்தி 27 Jan 2023 12:27 AM IST (Updated: 27 Jan 2023 3:51 PM IST)
t-max-icont-min-icon

குடியரசு தினத்தையொட்டி பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

பெரம்பலூர்

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் குடியரசு தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன.

ஆனாலும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்தது. போலீசார் சட்ட விரோத மது விற்பனைக்கு பெயரளவுக்கு வழக்குகளை பதிவு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

கூடுதல் விலைக்கு விற்பனை

நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளில் சிலர் அளவுக்கு அதிகமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து நேற்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர்.

குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் சீகூரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை அதிகளவில் நடைபெற்றதாகவும், எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அமைப்பு சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற போவதாகவும் கூறப்படுகிறது.


Next Story