இலுப்பையூரணி மக்கள் ஆர்ப்பாட்டம்


இலுப்பையூரணி மக்கள் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு இலுப்பையூரணி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் முன்பு இலுப்பையூரணியில் அடிப்படைவசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் மாடசாமி தலைமை தாங்கினார். பின்னர் மேலாளர் தனலட்சுமியிடம், இலுப்பையூரணி பஞ்சாயத்து பகுதிகளில் ரோடு, வாறு கால், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story